வாங்காத பணத்துக்கு கைது உத்தரவா? – கலைப்புலி தாணு விளக்கம்

Bookmark and Share

வாங்காத பணத்துக்கு கைது உத்தரவா? – கலைப்புலி தாணு விளக்கம்

நான் வாங்காத பணத்துக்காக என்னைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பொய் வழக்கு என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.

நாகர்கோயிலைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர், கலைப்புலி தாணு தமக்கு ரூ 2 லட்சம் தர வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கில் தாணு சார்பில் வழக்கறிஞர்கள் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து கலைப்புலி தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கலைப்புலி தாணு கூறுகையில், “இது பொய்யான வழக்கு. நான் தயாரித்த திருமகன் (2007) படத்தை வாங்கித் திரையிட்டவருக்கும் இந்த தியேட்டர் உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினையில், தேவையில்லாமல் என் பெயரை இழுத்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த தியேட்டர் உரிமையாளரிடம் நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.

எந்த வகையிலும் சம்பந்தமில்லாத என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் அந்த தியேட்டர்காரர். அவரிடம் ரூ 2 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றும் நிலையிலா நான் இருக்கிறேன்? இந்தப் பிரச்சினை இன்று முடிந்துவிடும்…” என்றார்.

‘தன்னைத் தேடி வரும் எத்தனையோ சினிமாக்காரர்களுக்கு கேட்காமலேயே உதவி செய்பவர் கலைப்புலி தாணு. அது திரையுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

அதுமட்டுமல்ல, கோயில், கிராமங்களுக்கு அடிப்படை வசதி செய்தல் என நல்ல காரியங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்பவர் கலைப்புலி தாணு. அவர் மீது இப்படி ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதே மோசடியானது, உள்நோக்கம் கொண்டது’ என திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
இந்த வயசுலயும் இப்படியொரு அழகா? நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்?
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்!
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions