ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்

Bookmark and Share

ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை ராஜபாண்டி இயக்கி வருகிறார். படம் பற்றி இயக்குநர் கூறும்போது, 

அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம்.

நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பார். அது திரையில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தும்படி இருக்கிறது. ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளோம் என்றார்.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். 


Post your comment





Related News
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!
பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா?
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் !
நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions