கழுகு கிருஷ்ணாவின் 'இல்ல ஆனாலும் இருக்கு'..!

Bookmark and Share

கழுகு கிருஷ்ணாவின் 'இல்ல ஆனாலும் இருக்கு'..!

நீ தானே என் பொன்வசந்தம், கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகியப் படங்களைத் தயாரித்த ஆர்.எஸ்.இண்போடெய்ன்மெண்ட் தற்போது ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கும் யான் படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ஜீவா, துளசி நாயர் ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ள ஆர்.எஸ்.இண்போடெய்ன்மெண்ட் நிறுவனம் அப்படத்திற்கு 'இல்ல ஆனாலும் இருக்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் நகைச்சுவையான ஒரு திகில் படமாகும்.இதில் ஹீரோவாக கழுகு கிருஷ்ணா நடிக்கிறார்.

இதில் 15 புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்கும் டி.கே, இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றவர்.

தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் 20 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள இப்படம் மேலும், 30 நாட்களுக்கு அங்கேயே படமாக்கப் பட உள்ளது.

பெரிய நட்சத்திரங்கள், பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து ஆர்.எஸ்.இண்போடெய்ன்மெண்ட் சார்பில், தொடர்ந்து வெற்றிப் படங்களை தயாரித்து வரும் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் "இல்ல ஆனாலும் இருக்கு' படம் எங்கள் நிறுவனத்தின் மிக முக்கியமான படமாக திகழும்." என்று பெரும் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.


Post your comment





Related News
ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.!
எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை
பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்!
அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா!
மெர்சலும் விஸ்வாசமும் செய்த அதிரடி சாதனை - No 1 யார் தெரியுமா?
இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?
திடீரென படத்தையே மாற்றிய ஜோதிகா - ஏன் தெரியுமா?
அசுரன் குறித்த அசுரத்தனமான அப்டேட் வெளியானது!
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions