காதலுக்கு அச்சாரம் போட்ட இயக்குநரின் 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் - ஹிரோவாக பிரசன்னா!

Bookmark and Share

காதலுக்கு அச்சாரம் போட்ட இயக்குநரின் 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் - ஹிரோவாக பிரசன்னா!

திருமணத்துக்கு பின் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் நடிகர் பிரசன்னா. அதுவும் தங்களது காதலுக்கு அச்சாரம் போட்ட டைரக்டரின் படத்திலேயே நடிக்கிறார்.


"அச்சமுண்டு அச்சமுண்டு" என்ற படத்தை இயக்கியவர் டைரக்டர் அருண் வைத்தியநாதன். இப்படத்தில் தான் சினேகாவும், பிரசன்னாவும் இணைந்து நடித்தார்கள். அதன்பிறகு இருவரும் காதலித்து, திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் சினேகா தொடர்ந்து நடித்து வருகிறார்.


ஆனால் பிரசன்னாவுக்கோ சென்னையில் ஒருநாள் உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோல் போன்ற வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது. ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.


இந்நிலையில், இப்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரசன்னா. படத்திற்கு "கல்யாண சமையல் சாதம்" என்று பெயர் வைத்துள்ளனர்.  இதில் பிரசன்னாவுக்கு ஜோடியாக லேகா வாஷிங்டன் நடிக்கிறார்.  குறும்படங்களை இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னா என்பவர் இப்படத்தை இயக்குகிறார். அச்சமுண்டு அச்சமுண்டு டைரக்டர் அருண் வைத்தியநாதனே இப்படத்தை தயாரிக்கிறார்.

 

இவர்களுடன் டெல்லி கணேஷ், உமா பத்மநாபன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  ஒரு திருமணமும் அதைசுற்றி நடக்கும் நகைச்சுவை கலாட்டாக்களும் தான் இப்படத்தின் கதை.


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!
என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்!
அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்!
காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்?
சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா? ரசிகைகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்!
பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை!
கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ!
தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்!
நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions