தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்

Bookmark and Share

தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தல 59’ என்று குறிப்பிடப்படுகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. பிரபல இயக்குனர் பிரியதர்‌ஷன் மற்றும் முன்னாள் நடிகை லிசி இருவரது மகள்தான் கல்யாணி.

மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. ‘ஹலோ’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கல்யாணி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், துல்கர் சல்மான் ஜோடியாக ‘வான்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


Post your comment





Related News
தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா?
மெர்சலும் விஸ்வாசமும் செய்த அதிரடி சாதனை - No 1 யார் தெரியுமா?
நேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸ் தேதி, நேரம் இதோ – மரண மாஸ் அப்டேட்!
இந்தியில் ரீமேக்காகும் தலயின் வீரம் - ஹீரோ யார் தெரியுமா?
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions