மலையாளிகளுக்கு நன்றிகடன் பட்டிருக்கிறேன்: கமல் நெகிழ்ச்

Bookmark and Share

மலையாளிகளுக்கு நன்றிகடன் பட்டிருக்கிறேன்: கமல் நெகிழ்ச்

உலக மலையாளிகள் கவுன்சில் சென்னையில் 2006ம் ஆண்டுமுதல் மெட்ராஸ் மெடிக்கல் மிஷனுடன் இணைந்து ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்து வருகிறது. இதுரை 164 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மலையாள இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டி இந்தப் பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்த இருதய அறுவை சிகிச்சை திட்டத்துக்கு கமல்ஹாசன் தூதராக உள்ளார்.இந்த ஆண்டு ஹிருதயராகம் என்ற தலைப்பில் மலையாள இசை அமைப்பாளர்  எம்.ஜெயச்சந்திரனின் இசை நிகழ்ச்சி சென்னை புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடந்தது.

இதில் மலையாள பின்னணி பாடகர், பாடகிகள் கலந்து கொண்டு பாடினார்கள். பின்னர் கமல்ஹாசன் இந்த ஆண்டு இலவச இருதய அறுவை சிகிக்சை செய்வற்காக உலக மலையாளிகள் கவுன்சில் சார்பில் 25 லட்சம் ரூபாயை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் அமைப்பிடம் வழங்கினார்.பின்னர் அவர் மலையாளத்தில் பேசிதாவது: எனக்கும், மலையாளிகளுக்குமான பந்தம் பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

என் சினிமா வாழ்வின் ஆரம்ப காலங்களில் மலையாளிகள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். அன்று முதல் இன்று வரை அவர்கள் என்னோடு இருக்கிறார்கள். நான் அவர்களோடு இருக்கிறேன்.

அந்த நன்றி கடனுக்காக இந்த மேடையில் நான் நிற்கிறேன். பாபநாசம் படத்திற்காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று இங்கே சொன்னார்கள். ரீமேக் படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படுவதில்லை.

அப்படி வழங்குவதென்றால் என் சகோதரன் மோகன்லாலுக்கு வழங்க வேண்டும். உலக மலையாளிகள் கவுன்சிலின் இந்த உன்னத பணி தொடர எனது வாழ்த்துக்கள். என்றார்.

 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions