2015 இல் உலகநாயகன் கமல்ஹாசன்!

Bookmark and Share

2015 இல் உலகநாயகன் கமல்ஹாசன்!

கமல்ஹாசன் நடித்து “உத்தம வில்லன்”, ” பாபநாசம் “, ” தூங்காவனம் ” ஆகிய மூன்று படங்கள் வெளிவந்தது. அதில் ” பாபநாசம் ” அனைவரையும் கவர்ந்த படமாக அமைந்தது.

உத்தம வில்லன்

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் ஹசன் நடித்து வெளிவந்த படம் உத்தம வில்லன். இதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், பூ பார்வதி, ஜெயராம், என ஏராளமானோர் நடித்திருந்தனர்.

இந்த படம் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் (LAIFFA) திரையிடப்பட்டது. ஐந்து விருதுகளையும் வாங்கியுள்ளது. சிறந்த நடிகர் – கமல்ஹாசன், சிறந்த படம் – உத்தமவில்லன், சிறந்த இசை – ஜிப்ரான், சிறந்த பாடல் – ஜிப்ரான், சிறந்த ஒலி வடிவமைப்பு – குனல் ராஜன். ரஷ்யன் திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான விருதினையும் பெற்றுள்ளது உத்தமவில்லன்.

பாபநாசம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார். கேபிள் டிவி ஆப்ரேட்டராக வரும் கமல், தன் மகள், மனைவி தற்ச்செயலாக செய்யும் கொலையில் இருந்து எவ்வாறு அவர்களை காப்பாற்றுகிறார் என்பதை அழகாக படமாக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடமும் பிடிக்கிறார் உலக நாயகன்.

தூங்காவனம்

வேட்டையாடு விளையாடு படத்திற்கு அப்புறம் கமல் போலீஸ் அதிகாரியாக நடித்து வெளிவந்த திரைப்படம் தூங்காவனம். ஆனால், கமல் இதில் நல்ல போலீஸ் அல்ல… கெட்ட போலீஸ் என்பது ஹைலைட்!

பணத்திற்காக செய்யக் கூடாததை எல்லாம் தன் அதிகாரத்தை பயன்படுத்தி செய்யக் கூடியவர் போலீஸ் அதிகாரி கமல். ஒரு நாள் போதை பொருள் கடத்தல் மன்னன் பிரகாஷ்ராஜிடம் இருந்து, காஸ்ட்லியான சரக்கை ஆட்டைய போடுகிறார் கமல். இது, சக போலீஸ்… த்ரிஷாவின் பார்வையில் படுகிறது. இந்நிலையில் பல கோடி மதிப்புள்ள சரக்கை லவட்டிய கமலிடமிருந்து தனது சரக்கை மீட்க, கமலின் மகனை தூக்குகிறார் பிரகாஷ்.

மகனை மீட்பதற்காக சரக்கை திருப்பி கொடுக்கும் முடிவிற்கு வரும் கமல், சரக்கை தான் பதுக்கிய இடத்தில் போய் பார்க்க, அங்கு அது இருந்ததற்கான தடயமே இல்லாது சரக்கு எஸ்’ ஆகியிருக்கிறது. சரக்கு போன இடம் எது? கமல் மகனின் நிலை என்ன? கடத்தல்காரர் பிரகாஷிட மிருந்து, கமல், சரக்கை கடத்த காரணம் என்ன..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விறுவிறுப்பாக விடை அளித்து நீங்கா இடத்தை பிடித்த படம் தூங்காவனம்.

2016 ஆம் ஆண்டும் உலக நாயகனுக்கு நல்ல ஆண்டாக அமைய தமிழ் ஸ்டார் வாழ்த்துகிறது.


Post your comment

Related News
மாரடைப்பால் உயிரிழந்தார் கிரேசி மோகன்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் - ஆச்சரியத் தகவல்!
கடாரம் கொண்டான் படத்துக்கு என்னதான் ஆச்சு - வெளிவந்த புது அப்டேட்!
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions