சூப்பர் ஸ்டார் பட தயாரிப்பாளரிடம் கமல் வைத்த கோரிக்கை

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் பட தயாரிப்பாளரிடம் கமல் வைத்த கோரிக்கை

கோவையைச் சேர்ந்த சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்கிற நாவலைத் தழுவி வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ள விசாரணை பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்தை ரஜினியின் எந்திரன் 2ஓ உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

இந்தப்படத்தை கமல் பார்த்துவிட்டுப் பாராட்டியிருக்கிறார். அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், நல்ல சினிமாவின் தாக்கத்தை வெற்றிமாறனின் மனதில் பதித்துச் சென்ற பாலுமகேந்திராவுக்கு நன்றி.

நேற்று விசாரணை படம் பார்த்து வியந்தேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் படம் பார்க்கும்போது உடனிருந்த லைபாபுரொடக்ஷன்ஸ் நிர்வாகி ராஜூமகாலிங்கத்திடம் இது பற்றிக்கேட்டபோது, படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் வெற்றிமாறனிடம் படம் பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். 

நீங்கள் பல பெரிய படங்களைத் தயாரித்தாலும் இதுபோன்ற நல்லபடங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுக்கவேண்டும் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டார். நல்லபடங்களின் மீது அவர் காட்டும் அக்கறை அதில் தெரிந்தது என்கிறார் ராஜூமகாலிங்கம்.    

 


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions