மீண்டும் பத்து அவதாரம் எடுத்த கமல்!

Bookmark and Share

மீண்டும் பத்து அவதாரம் எடுத்த கமல்!

நவராத்திரி படத்தில் சிவாஜிகணேசன் ஒன்பது வேடங்களில் நடித்திருந்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய தசாவதாரம் படத்தில் கமல் பத்து விதமான வேடங்களில் நடித்தார்.

ஒவ்வொரு வேடங்களுக்காகவும் நிறைய ரிஸ்க் எடுத்து ஒன்றுக்கொன்று அதிகப்படியான வித்தியாசம் காட்டும் வகையில் ஒப்பனைகள் செய்து அந்த படத்தில் நடித்தார் கமல்.

இந்த நிலையில், தற்போது ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தில் 8ம் நூற்றாண்டு, 21ம் நூற்றாண்டு என இரண்டுவிதமான கதைகளில், இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் கமல்.

கடந்த 2 வருட உழைப்பிற்கு பிறகு தற்போது திரைக்கு வரத் தயாராகி உள்ளது உத்தமவில்லன்.  இந்த படத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதோடு நில்லாமல், கதை, திரைக்கதை வசனம், பாடல்கள், பின்னணி, நடிப்பு, தயாரிப்பு, இசை ஆலோசனை என மேலும் பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார். அந்த வகையில், இந்த உத்தமவில்லனிலும் கமல் பத்து அவதாரம் எடுத்திருக்கிறார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions