இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!

Bookmark and Share

இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!

ஒட்டப்பிடாரம்: இந்து தீவிரவாதி என்ற கருத்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு எதிர்ப்பு வலுப்பதை அடுத்து அரவக்குறிச்சியை போல் ஒட்டப்பிடாரத்திலும் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியில் பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவரது பெயர் நாதுராம் கோட்சே. இங்கு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை" என்று கூறினார். 

இந்நிலையில் இவ்வாறு இந்துக்களை தீவிரவாதி என கமல் கூறியதாக அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கமலின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரவக்குறிச்சியில் நேற்று கமல்ஹாசன் கலந்துகொள்ள இருந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கமல் கருத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்துள்ளதால், இன்று ஒட்டப்பிடாரத்தில் அவர் மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் திருப்பரங்குன்றத்தில் நாளை திட்டமிட்டபடி பிரசாரம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல் தெரிவித்த இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பலர் தங்களின் எதிர்ப்பையும், சிலர் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.,

 


Post your comment





Related News
ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?
இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?
மாரடைப்பால் உயிரிழந்தார் கிரேசி மோகன்.!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் - ஆச்சரியத் தகவல்!
கடாரம் கொண்டான் படத்துக்கு என்னதான் ஆச்சு - வெளிவந்த புது அப்டேட்!
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions