மீண்டும் இணையும் கமல் - அமலாவின் 'அம்மா அப்பா விளையாட்டு'

Bookmark and Share

மீண்டும் இணையும் கமல் - அமலாவின் 'அம்மா அப்பா விளையாட்டு'

இது யாரையும் 'மிஸ்லீட்' பண்ண வைக்கப்பட்ட செய்தித் தலைப்பு அல்ல.. நிசமாகவே கமலும் அமலாவும் நடிக்கும் புதிய படத்துக்காக வைக்கப்பட்டுள்ள தலைப்பு ஒன்றின் தமிழாக்கம். சத்யா, வெற்றி விழா போன்ற படங்களுக்குப் பிறகு கமல் ஹாஸனும் அமலாவும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்கள் அல்லவா... இந்தப் படத்துக்குதான் தெலுங்கில் அப்பா அம்மா விளையாட்டு என்ற பொருள் வரும் வகையில் அம்மா நானா ஆட்டா என்று தலைப்பிட்டுள்ளனர்.

தமிழில் இதே தலைப்பை வைப்பார்களா? சந்தேகம்தான். கான்ட்ராவர்சி எதுவுமில்லாததாலோ என்னமோ கமலின் கடந்த இரு படங்களுமே சுமாராகத்தான் போயின. அந்தக் குறையை ஈடுகட்ட ஒருவேளை பெரும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் இதே தலைப்பை வைத்துவிடுவார்களோ?

குறிப்பு: அம்மா அப்பா விளையாட்டு என்ற தலைப்பு தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே பாண்டியராஜன் - ரஞ்சிதாவை வைத்து பாலு மகேந்திரா எடுக்கவிருந்த ஒரு படத்துக்கு இந்தத் தலைப்பைச் சூட்டியுள்ளார். இசைத்தட்டு மட்டும் வந்தது. படம் வெளியாகவில்லை!


Post your comment





Related News
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions