மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கமல்-இளையராஜா பங்கேற்பு!

Bookmark and Share

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கமல்-இளையராஜா பங்கேற்பு!

தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வெளிப்புற விளம்பரங்களில் முதன்மை நிலையில் இருந்து வரும் நிறுவனம் எஸ்.எஸ்.இண்டர்நேஷனல். 2014ல் கல்கியின் பொன்னியின் செல்வனை மிக பிரமாண்டமாக 18 முறை மேடையேற்றிய நிறுவனம் இது.

இந்த நிறுவனம் பிப்ரவரி 28ஆம் தேதி சென்னையிலுள்ள மியூசிக் அகாடமியில் மாலை 7 மணிக்கு மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறது. அந்த நிகழ்ச்சியில் நாட்டின் மிக உயரிய இசைக்கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

குறிப்பாக, அன்றைய தினம் நடிகர் கமல்ஹாசனும், இளையராஜாவும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்கள். அப்போது, மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பற்றிய ஒளி-ஒலி குறுந்தகடை கமல்ஹாசன் வெளியிடுகிறார்.

அவர்களுடன், உஸ்தாத் ஜாகிர்உசேன், விக்கு விநாயகராம், அருணாசாய்ராம், ஹரிஹரன், சங்கர் மகாதேவன், சிவமணி, குனால் கன்ஜவாலா, மாண்டலின் ராஜேஷ், ரஞ்சித் பரோட், அனில்ஸ்ரீனிவாசன், செல்வகணேஷ், தேவிஸ்ரீ பிரசாத், ஸ்டீபன் தேவசி, உமா சங்கர், ஹர்மீத் உள்பட பல இசைக்கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் கலந்து கொள்ளவும் இலவச அனுமதி கொடுக்கப்படுகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions