நடிகர் சங்கத்தின் கவுரவ பதவிக்கு சம்மதம் தெரிவித்த கமல்!

Bookmark and Share

நடிகர் சங்கத்தின் கவுரவ பதவிக்கு சம்மதம் தெரிவித்த கமல்!

நடிகர் சங்க புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் பொறுப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த நடிகர் சங்கத்தில் மூத்த நடிகர்களுக்கு கவுரவ பதவி அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே ஒரு கருத்து எழுந்தது. அதன்படி ரஜினி, கமல் ஆகியோருக்கு கவுரவப் பதவி வழங்குப்படும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சங்கத்தின் கவுரவ பதவிக்கு நடிகர் கமல் சம்மதம் தெரிவித்துள்ளார். இதை நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் மேடையில் அறிவித்தார். செயற்குழு டிரஸ்டிகளில் ஒருவராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனால், நடிகர் சங்கத்தில் கவுரவ பதவிக்கு ரஜினி எதுவும் சம்மதம் தெரிவிக்காமலே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions