கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா

Bookmark and Share

கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா

மலையாள பட உலகில் 17 வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. அங்குள்ள மம்முட்டி, மோகன்லால் படங்களை ஷகிலாவின் படங்கள் வசூலில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தன. ஷகிலா படங்கள் திரைக்கு வரும்போது மற்ற நடிகர்கள் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீசை தள்ளிவைக்கும் நிலைமை இருந்தது.

தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருகிறது. இதில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. கோடையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். சினிமா வாழ்க்கை குறித்து ஷகிலா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்தது. 15-வது வயதில் இருந்து படங்களில் நடித்து வருகிறேன். என்னாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஷகிலா என்றாலே ஆபாச பெண் கதாபாத்திரத்தில் நடிப்பவர் என்பதுபோல் முத்திரை குத்தி விட்டனர். 

குடும்பத்துக்காகவே கவர்ச்சி நடிப்புக்கு தள்ளப்பட்டேன். ஆனால் குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி சம்பாதித்த பணத்தை எல்லாம் பறித்துக்கொண்டார். எனக்கு நிறைய காதல் தோல்விகள் ஏற்பட்டுள்ளன.

தற்கொலைக்கும் முயன்று இருக்கிறேன். நான் கமல்ஹாசன் ரசிகை. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அவருடைய படங்களைத்தான் பார்ப்பேன். கமல்ஹாசன் கட்சியில் சேரவும் ஆர்வம் இருக்கிறது.”


Post your comment





Related News
இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்!
கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்?
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ!
இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்!
தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions