கமலின் புதிய திட்டம்!

Bookmark and Share

கமலின் புதிய திட்டம்!

கமல் நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘தூங்காவனம்’. இதில் கமலுடன் திரிஷா, கிஷோர், யூகிசேது உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களிலேயே விறுவிறுப்பாக முடிந்தது.

தற்போது தான் நடிக்கும் அடுத்த படத்தையும் 50 நாட்களில் முடிக்க கமல் திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் திரைக் கதையை கமல் எழுத, பிரபல மலையாளப் பட இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்குகிறார். 26 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜீவ் குமாருடன் கமல் இணைகிறார். இதற்கு முன் 1989ல் இவர்கள் கூட்டணியில் சாணக்யன் (மலையாளம்) வெளிவந்தது.

குடும்ப பின்னணியில் நகைச்சுவை சார்ந்த படமாக இப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் பாலிவுட் நடிகை ஜரீனா மற்றும் அமலா அக்கினேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படத்தின் பெரும்பாலான காட்சிகள் நியூயார்க்கில் மற்றும் ஜியார்ஜியாவில் 50 நாட்களுக்குள் படமாக்கப்பட உள்ளன.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ்-மலையாளம் என இருமொழிகளில் உருவாக்கப்பட இருக்கிறது.


Post your comment





Related News
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions