கமல்ஹாசனுக்கு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மரியாதை செலுத்த அழைப்பு!

Bookmark and Share

கமல்ஹாசனுக்கு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மரியாதை செலுத்த அழைப்பு!

கமலஹாசன் உலக தரத்தில் திரைப்படங்கள் அமைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களையும் தனது படங்களில் பயன்படுத்தி உள்ளார். நவீன தொழில் நுட்பங்களை படத்தில் புகுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். 

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள கமலஹாசனுக்கு, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகமும் மரியாதை அளிக்க உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களை இந்த பல்கலைக்கழகத்தில் அழைத்து பேச வைக்கிறார்கள். கமலஹாசனுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

வருகிற பிப்ரவரி 6–ந் தேதி இந்த பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க கமலஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பேசவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அதன்படி பிப்ரவரி 6–ந் தேதி ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமலஹாசன் உரையாற்றுகிறார். 

இந்த விழாவில், இந்தியா சார்பில் கமல் தவிர காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட வேறு சிலரும் கலந்து கொள்கிறார்கள். இதன் மூலம் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும் முதல் தென் இந்திய நடிகர் என்ற பெருமையை கமல் பெற்றுள்ளார்.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions