கமல் படத்தில் நடிக்கும் ஸ்ருதி?

Bookmark and Share

கமல் படத்தில் நடிக்கும் ஸ்ருதி?

கமல் இப்போது மலையாள இயக்குநர் சஞ்சீவ்குமார் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவர் நடிப்பில் அந்தப்படம்தான் அடுத்து வருகிற படமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். 

கடந்தஆண்டைப் போலவே இந்தஆண்டும் மூன்றுபடங்களாவது கொடுத்துவிடும் திட்டத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் ஒரு படத்தை அனைவரும் கவனித்தே ஆகவேண்டும் என்கிற வகையில் அமையவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியமொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் புகழ்பெற்றவர் கமல்.கமலுடைய மகள் ஸ்ருதிஹாசனும் அவரைப்போலவே தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருக்கிறார். ஆகையால் அப்பா கமல்ஹாசனும் மகள் ஸ்ருதிஹாசனும் இணைந்து ஒருபடத்தில் நடிக்கத்திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இருவரும் இணையும் அடுத்தபடமாகவே இருக்கலாம் அல்லது அதற்கடுத்த படமாக இருக்கலாம் எப்போது இருந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகும் படமாகவே இருக்கும் என்கிறார்கள். 

படத்திலும் அவர்கள் இருவரும் அப்பா மகளாகவே நடிக்கவிருக்கிறார்களாம். அவர்கள் இருவரும் தேவைப்படுகிற அளவு வலிமையான கதை அமைந்திருப்பதால் இருவரும் சேர்ந்து நடிக்கும் முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.


Post your comment





Related News
பிக் பாஸ் வீட்டிற்குள் தல அஜித் ஸ்டில், நீங்க இதை கவனித்தீர்களா? - புகைப்படங்களுடன் இதோ.!
இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions