காமராஜ் படத்தில் நடித்த சசிபெருமாளுக்கு இயக்குனர் இரங்கல்

Bookmark and Share

காமராஜ் படத்தில் நடித்த சசிபெருமாளுக்கு இயக்குனர் இரங்கல்

இளம் வயதில் இருந்து காந்தியின் கொள்கையை பின்பற்றி காந்தியவாதியாக வாழ்ந்து வந்தவர் சசிபெருமாள். மதுவிலக்கிற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் போராடி வந்தார்.

இவர் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் இருக்கும் ஒரு டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக சசிபெருமாள் உயிரிழந்தார். இவருக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சசிபெருமாள் ‘காமராஜ்’ படத்தில் காமராஜரின் உதவியாளர் வைரவன் வேடத்தில் நடித்திருந்தார். இவரது மறைவுக்கு அப்படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

சசிபெருமாளைப் பற்றி பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘2004ல் காமராஜ் திரைப்படம் வெளியான பின்பு பெருந்தலைவரைப் பற்றி நெகிழச்செய்யும் பல தகவல்கள் எங்களை நோக்கி வந்தவண்ணம் இருந்தன. அவற்றை ‘காமராஜ்’ திரைப்படத்தை டிஜிட்டல் மயமாக்கும்போது இணைக்க திட்டமிட்டிருந்தோம்.

அவற்றில் முக்கியமானது பெருந்தலைவர் காமராஜர் இறந்தபின்பு அவரது சொத்துமதிப்பை கணக்கிட்டு ரூ.110 மற்றும் சில வேட்டி சட்டைகள். அவர் பரம ஏழையாக வாழ்ந்துள்ளார் என்பது வரலாறு.

இக்காட்சியில் சொத்து மதிப்பை கணக்கிடும் அதிகாரியாக சமுத்திரகனி நடித்தார். பெருந்தலைவரின் உதவியாளராக 25 ஆண்டுகள் இருந்த வைரவன் வேடத்தில் நடிக்க பொருத்தமான, மனிதரை தேடினோம். ஏனென்றால் எங்களிடம் பழகிய வைரவன் அவர்கள் பெருந்தலைவரின் நிழலில் வாழ்ந்து ஒரு தேசத் தொண்டராக, யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்க்காதவராக இருந்தார்.

அத்தகைய மனிதருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக சசிபெருமாள் வைரவன் ஆக நடித்தார். அவரை அணுகியதும் எந்த தயக்கமும் இன்றி, தனக்கு கிடைத்த பாக்கியமாக நடித்துக் கொடுத்தார். அவர் தோன்றியுள்ள ஒரே திரைப்படமும் இது தான்.

அவரது திடீர் மறைவு எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவரது புனிதமான நோக்கம் வெற்றியடையும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை. எனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன்’’ என்றார்.


Post your comment

Related News
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
பிரபல நடிகருக்கு போன் செய்து வாழ்த்து கூறிய விஜய்- நடிகரே வெளியிட்ட தகவல்
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்
விஜயிடம் குட் சர்ட்டிஃபிகேட் வாங்கிய அருண்ராஜா காமராஜுக்கு விருது!
வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ்
காமராசர் இல்லத்தில் சமுத்திரகனி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions