காஞ்சனா இந்தி ரீமேக்கில் நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் – மாஸ் கூட்டணி ரெடி!

Bookmark and Share

காஞ்சனா இந்தி ரீமேக்கில் நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் – மாஸ் கூட்டணி ரெடி!

ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா. தமிழ் சினிமாவில் இன்று பார்ட்-2 சீசன் மற்றும் பேய் சீசன் டிரெண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த படம் தான்.

2015ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் காஞ்சனா முதல் பாகம் இந்தியில் லக்‌ஷ்மி பாம்ப் எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்றும் இதில் அக்ஷய் குமார் ஹீரோவாகவும் தோனி படத்தில் நடித்த கியாரா அத்வானி ஹீரோயினாகவும் நடித்து வருவதாகவும் நாம் கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் சரத்குமார் வேடத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரத்குமாரை போலவே அமிதாப்பச்சனும் திருநங்கை வேடத்தில் நடிக்கிறாராம். அண்மையில் இதன் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் தொடங்கியுள்ளது.


Post your comment





Related News
100 கோடி கிளப்பில் இணைந்த காஞ்சனா 3 – மாஸ் காட்டும் லாரன்ஸ்!
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
பல வெளிநாட்டு மொழிகளில் ரீமேக் ஆகும் காஞ்சனா
கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள்: காஞ்சனா2 வில்லன் யோகிராம்
ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின்
ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்த காஞ்சனா 2
50வது நாளில் இரண்டு படங்கள்...!
தெலுங்கு காஞ்சனா 2 படத்தின் வசூலும் 50 கோடியாம்
தெலுங்கிலும் காஞ்சனா – 2 மாபெரும் வெற்றி
மே 1ஆம் தேதி முதல் தெலுங்கிலும் காஞ்சனா -2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions