மனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற பிரபல நடிகர் கைது.!

Bookmark and Share

மனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற பிரபல நடிகர் கைது.!

மனைவியைக் கத்தியால் குத்திப் படுகாயமடையச் செய்த பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். பிரபல நடிகர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்ட செயல் கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத்தில் பிரபலமான இளம் நடிகர் தர்ஷன். இவர் பழம்பெரும் நடிகர் தூகுதீபா ஸ்ரீனிவாஸின் மகன் ஆவார். பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு வினீஷ் என்ற 3 வயது மகன் உள்ளான்.

குடும்பச் சண்டை காரணமாக கணவனும், மனைவியும் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். தர்ஷன் தனியாகவும், அவரது மனைவி தனது குழந்தையுடனும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் விஜயலட்சுமி தங்கியிருந்த அவரது நண்பரின் வீட்டுக்கு தர்ஷன் ஆவேசமாகப் போயுள்ளார். அங்கு விஜயலட்சுமியுடன் கடும் வாக்குவாதம் புரிந்துள்ளார். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி குத்தியுள்ளார். பின்னர் தனது ரிவால்வரை எடுத்து மனைவியையும், மகனையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.

தாக்குதலில் விஜயலட்சுமி படுகாயமடைந்து வீழ்ந்தார். அதன் பின்னர் அங்கிருந்து தர்ஷன் போய் விட்டார். உடனடியாக விஜயலட்சுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். படுகாயமைடந்துள்ள அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த விஜயநகர் போலீஸார் தர்ஷனைக் கைது செய்தனர்.

நீண்ட காலமாக சினிமாவில் நடித்து வரும் தர்ஷன் அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்துள்ள ஒரு கலைஞர் ஆவார். எந்தவிதமான கிசுகிசுவிலும் சிக்காதவர். இந்த நிலையில் அவர் இப்படி நடந்து கொண்டது அவரது ரசிகர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் அதிர்சி அளித்துள்ளது.


Post your comment

Related News
துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்
கவியரசு கண்ணணதாசனுக்கு மலரஞ்சலி செலுத்திய இணையதளம் படக்குழு
கண்ணதாசன் - எம்.எஸ்.வி., கூட்டணியில் உருவான முக்கியமான பாடல்கள்!
நடிகை விஷாலி கண்ணதாசன் பா.ஜ.கவில் இணைந்தார்
கவிஞர்களுக்கு கண்ணதாசன் விருது
கவியரசர் கண்ணதாசன் விழா: 18ந் தேதி நடக்கிறது
\'சென்னை-28\' ஏழு வருடங்களுக்கு பிறகு ரீமேக் ஆகிறது..!
டப்பிங் படங்கள் வெளிவந்தால் இரத்த ஆறு ஓடும்-வாட்டாள் நாகராஜ்..!
நடிகை ஸ்ருதியின் 2வது திருமணம் குடும்ப நல நீதிமன்றத்தால் ரத்து.
ஸ்ருதியின் இரண்டாவது திருமண வாழ்வில் சூறாவளி - விவாகாரத்து செய்ய முடிவு.
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions