வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்று கரீனாகபூர் பரிசோதினை!

Bookmark and Share

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்று கரீனாகபூர் பரிசோதினை!

இந்தி நடிகை கரீனாகபூரும், நடிகர் சயீப் அலிகானும் 2012-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். கரீனா கபூர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை சயீப் அலிகான் உறுதிப்படுத்தினார். அவர் கூறும்போது, “கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு இருவரும் சந்தோஷமாக தெரிவிக்கிறோம். வருகிற டிசம்பர் மாதம் எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறோம்” என்றார்.

45 வயதாகும் சயீப் அலிகான் ஏற்கனவே நடிகை அம்ரிதா சிங்கை திருமணம் செய்து பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தவர். இவர்களுக்கு சாரா என்ற மகளும், இப்ராகிம் என்ற மகனும் உள்ளனர். அதன்பிறகு கரீனா கபூரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கரீனாகபூரும் சயீப் அலிகானும் சமீபத்தில் லண்டன் சென்று இருந்தனர்.

அங்கு பிரபல மருத்துவமனைக்கு சென்று வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்று பரிசோதித்ததாகவும் அந்த பரிசோதனையில் ஆண் குழந்தை என்று தெரிந்து கொண்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.

இந்தியாவில் இதுபோன்ற பரிசோதனை செய்து குழந்தை ஆணா, பெண்ணா? என்று தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். எனவே ஆண்குழந்தையா? பெண் குழந்தையா? என்று அவர்கள் பரிசோதனை நடத்தியதற்கு கண்டனங்கள் கிளம்பின.

இந்த நிலையில் அதுபோன்ற பரிசோதனை எதுவும் நடத்தவில்லை என்று கரீனாகபூரும் சயீப் அலிகானும் தற்போது மறுத்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் “வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்று பரிசோதனை செய்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை. அதுமாதிரி சோதனை எதுவும் நடத்தப்படவில்லை. லண்டனில் இது சம்பந்தமாக டாக்டர் யாரையும் சந்தித்து ஆலோசிக்கவும் இல்லை. கற்பனையாக இந்த தகவல் பரப்பப்பட்டு உள்ளது” என்றனர்.


Post your comment





Related News
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions