கார்த்தி – ஜோதிகா ஜோடியாக நடிக்கிறார்களா? இதென்ன கொடுமை!

Bookmark and Share

கார்த்தி – ஜோதிகா ஜோடியாக நடிக்கிறார்களா? இதென்ன கொடுமை!

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை பாபநாசம், 36 வயதினிலே புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார்.

இதில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் இப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார்களா என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நேர்ந்த நிலையில் அதை படக்குழு மறுத்துள்ளனர். 

மேலும் இப்படத்தில் இவர்கள் இருவரும் சகோதரர்களா நடிப்பதாகவும் ஒரு சம்பவத்தில் இருந்து குடும்பமாக இவர்கள் எப்படி ஒன்றிணைந்து வெளியேறுகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் மையக்கரு என்றும் படக்குழு கூறியுள்ளனர்.

ஜூனியர் நடிகர்களுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கிவிட்டதாம். கூடிய விரைவில் இதன் படப்பிடிப்பில் கார்த்தியும் ஜோதிகாவும் பங்கேற்க உள்ளார்கள். இந்த படம் போக குலேபகவாலி இயக்குனர் கல்யாணின் இயக்கத்திலும் ஜோதிகா ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் மே 17-ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என ஒரு பட்டாளமே நடித்து வருகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions