ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்!

Bookmark and Share

ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்!

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை பாபநாசம், 36 வயதினிலே புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார்.

இதில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.இப்படத்தில் இவர்கள் இருவரும் சகோதரர்களா நடிப்பதாகவும் ஒரு சம்பவத்தில் இருந்து குடும்பமாக இவர்கள் எப்படி ஒன்றிணைந்து வெளியேறுகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் மையக்கரு என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் சத்யராஜ் இவர்களது தந்தையாக நடிக்கிறார்.இவர்கள் போக தற்போது நடிகை நிகிலா விமலும் இப்படத்தில் இணைந்துள்ளார். மேலும் படத்தில் இவர்தான் கார்த்திக்கு ஜோடி என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions