மீண்டும் வில்லனான கார்த்திக்!

Bookmark and Share

 மீண்டும் வில்லனான கார்த்திக்!

தமிழ் சினிமாவின் நவரச நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். காதல், ஆக்ஷ்ன், காமெடி, சென்ட்டிமென்ட் என கலந்து கட்டி பல வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக், அரசியல் பிரவேசம் உள்ளிட்டவைகளால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது. 

தற்போது அவரது மகன் கெளதம் கார்த்திக் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இருந்தாலும் கார்த்திக் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

இதில் கார்த்தியின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் கார்த்திக். இயக்குநர் வஸந்திடம் உதவியாளராக இருந்த வெற்றிசெல்வன், வைபவ்வை ஹீரோவாக வைத்து ஜிந்தா என்ற படத்தை இயக்குகிறார். 

இந்தப்படத்தில் வைபவ் ஜோடியாக இந்தியா பாகிஸ்தான் ஹீரோயின் சுஷ்மா நடிக்கிறார். கார்த்திக் வில்லனாக நடிக்க போகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. சென்னையில் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. ஜிந்தா படம் முழுக்க காமெடி மற்றும் த்ரில்லர் நிறைந்த படம் என்றும், கார்த்திக் உடன் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார் நடிகர் வைபவ்.


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions