ஒர்ஜினாலிட்டியை இழக்க விரும்பாத கார்த்திக்!

Bookmark and Share

ஒர்ஜினாலிட்டியை இழக்க விரும்பாத கார்த்திக்!

ரீ-என்ட்ரியில் மாஞ்சா வேலு, ராவணன், அநேகன் என சில படங்களில் நடித்த நவரச நாயகன் கார்த்திக், தற்போது புதிதாக இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், கார்த்திக் புதிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க மாட்டார் என்று கோலிவுட்டில் நிலவும் கருத்தினை உடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது புதிய டைரக்டர்கள் கதை சொல்ல வேண்டும் என்று தொடர்பு கொண்டால் அவர்களை அலைய விடாமல் உடனே அழைத்து கதை கேட்டு வருகிறார்.

ஆனால், அப்படி அவரிடம் கதை சொல்ல செல்பவர்கள், கதையையும், அவரது கேரக்டரையும் சொல்லி விட்டு, இந்த மாதிரி நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொன்னால் மட்டுமே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாராம் கார்த்திக். கேட்டால், எனக்கென்று ஒரு பாணி உள்ளது.

அதை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்கிறாராம். மணிரத்னம் படங்களைப்பொறுத்தவரை அனைவருமே அவர் சொன்னபடி பேசி நடிப்பார்கள். ஆனால் நான் மட்டும்தான் எனது பாணியலேயே நடித்திருப்பேன்.

காரணம், எந்த சூழ்நிலையிலும் நான் எனது ஒரிஜினாலிட்டியை இழக்க விரும்பியதில்லை. அதனால் மணிரத்னம்கூட எனக்கான டயலாக்கை என் விருப்பப்படியே பேசி நடிக்க அனுமதித்தார் என்று தனது நிலையை விளக்குகிறாராம் கார்த்திக்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ராஷ்மிகா
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions