உறவினர்களை நடிகர்களாக்கிய கார்த்திக் சுப்பாராஜ்

Bookmark and Share

உறவினர்களை நடிகர்களாக்கிய கார்த்திக் சுப்பாராஜ்

பீட்சா படத்தில் வெற்றியடைந்த கார்த்திக் சுப்பாராஜ் அடுத்து இயக்கிய ஜிகர்தண்டா வெற்றிப்படம் என்று சொல்லிவந்தனர். உண்மையில் ஜிகர்தண்டா வசூல்ரீதியில் தோல்விப்படம் என்ற உண்மையை போட்டு உடைத்துவிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர். ஜிகர்தண்டா ரீமேக் ரைட்ஸ் வழக்கு தொடர்பான பிரஸ்மீட் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது இந்த உண்மையைச் சொன்னார் ஜிகர்தண்டா படத்தின் தயாரிப்பாளர். ஆக.. கார்த்திக் சுப்பாராஜ் இரண்டாவது படத்தில் சறுக்கிவிட்டார் என்பதே உண்மை.

ஜிகர்தண்டா வெற்றிப்படம் போன்ற மாயை உண்டாக்கிவிட்டதாலோ என்னவோ தற்போது அவர் இயக்கும் இறைவி படப்பிடிப்பில் சற்றே தெனாவெட்டாகவே இருக்கிறாராம் கார்த்திக் சுப்பாராஜ்.

இறைவி படத்தில் நடிக்கும் அனைவரையும் நீ.. வா ..போ... என ஒருமையில்தான் அழைக்கிறாராம் கார்த்திக் சுப்பாராஜ்.  சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற மரியாதைகூட இல்லாமல் இப்படியா பேசுவது என்று அப்படத்தில் நடிக்கும் சீனியர் கலைஞர்கள் கதறுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, இறைவி படத்தில் தன் உறவினர்கள் சுமார் 24 பேரை நடிக்க வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். அதனல் இறைவி படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடமே கார்த்திக் சுப்பாராஜின் உறவினர்களால் சூழப்பட்டு காணப்படுகிறதாம்.

என்னதான் கார்த்திக் சுப்பாராஜின் உறவினர்களாக இருந்தாலும், விஜய்சேதுபதி, எஸ்.சூர்யா, பாபிசிம்ஹா போன்றவர்கள் லொகேஷனுக்கு வந்ததும் அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டு செல்பி, ஆட்டோகிராப் என நச்சரிக்கிறார்களாம். ஆரம்பத்தில் இதை சகஜமாக எடுத்துக் கொண்ட நட்சத்திரங்கள் போகப்போக கடுப்பாகிறார்களாம்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ராஷ்மிகா
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions