கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!

Bookmark and Share

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!

பொங்கல் விருந்தாக வெளியான ரஜினியின் பேட்ட படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது. ரஜினியின் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறுவது இதுவொன்றும் புதிதல்ல.ஆனால் பேட்ட படத்தின் வெற்றி அவர் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் வெற்றியாக அமைந்துள்ளது.

”எங்கள் ஆதர்ச நாயகன் மீண்டு வந்துவிட்டார்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் திரையரங்குகளிலும் கொண்டாடி தீர்த்தனர்.கூடவே இப்படத்தின் முதல் காட்சியில் ரஜினி பேசும் ”வீழ்வேனென்று நினைத்தாயோ” எனும் வசனம் அவர் தன் எதிரிகளுக்கு சொன்னது போலவே இருந்தது.

இப்படி பல சிறப்புகளை கொண்ட படம் என்பதால் மறுபடியும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ரஜினி ஓகே சொல்லிவிட்டாராம்.இதில் என்ன ஆச்சரியமென்றால் இப்படத்தை தனுஷே வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம்.

காலா படத்தால் அடைந்த நஷ்டத்துக்கு ஈடாக இந்த படம் என்று சொல்லப்படுகிறது. மேலும் தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படம் முடிந்ததும் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
நீங்களே இப்படி செய்யலாமா – ஒரு புகைப்படம் வெளியிட்டு தெரியாமல் மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்!
மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ராஷ்மிகா
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions