கார்த்திகாவின் காமெடி கலவரம்

Bookmark and Share

கார்த்திகாவின் காமெடி கலவரம்

எண்பதுகளில் நம்மூரில் பாக்யராஜ் நடித்தது மாதிரியான கேரக்டர்களாக பார்த்துதான் அல்லரி நரேஷ் நடிக்கிறார். அல்லரி படத்துக்கு டப்பு மினிமம் கேரன்டி என்பதால் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் அவர் ஃபேவரைட் ஹீரோ.

இருந்தாலும் அவருடைய படமென்றாலே ஹீரோயின்கள் மட்டுமல்ல, அக்கா, அம்மா நடிகைகளும் கூட ‘கால்ஷீட் பிஸி’ என்று ஜகா வாங்குகிறார்கள். என்ன செய்ய... அவருக்கு ஆயாவாக நடிப்பவர் கூட லைட்டாக ‘க்ளிவேஜ்’ காட்டியாக வேண்டும் என்பதுமாதிரி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உருவாக்கி, வெறியேற்றி வைத்திருக்கிறார்களே?!அவர் நடிக்கும் புதுப்படமான ‘பிரதர் ஆஃப் பொம்மாலி’யின் (தெலுங்கு படம்தான், டைட்டில் மட்டும் இங்கிலீஷ்) தங்கச்சி கேரக்டருக்கு ஆள் தேத்துவதற்குள் பேன்ட் கிழிந்துவிட்டது இயக்குநர் சின்னிக்கு.

கடைசியாக நரேஷே கேட்டுக்கொண்டதின் பேரில் கார்த்திகாவை அணுகினார்கள். கதைப்படி ட்வின்ஸ் என்பதால் இரட்டை வேடம். காமெடி கலந்த இரட்டை வேட பாத்திரம் என்பதால், எதையும் யோசிக்காமல் ஓகே சொல்லிவிட்டார் கார்த்திகா.

ஃபைட்டிங் சீனெல்லாம் உண்டு. டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து வூடு கட்டி அடித்திருக்கிறாராம்.அல்லரி நரேஷ் படங்களுக்கே உரிய எக்ஸ்க்ளூஸிவ் கிளாமரும் உண்டு. தங்கச்சி கேரக்டர் என்றாலும், அந்த ஏரியாவிலும் வஞ்சனை வைக்கவில்லை கார்த்திகா.

இவரது ட்வின் க்ளாமர் சீன்களை பார்த்துவிட்டு, தானும் முனைப்போடு திறமை காட்டியிருக்கிறார் ஹீரோயின் மோனல் கஜ்ஜார்.எது எப்படியோ, தெலுங்கானா மற்றும் சீமாந்திரா வாழ் பெருங்குடி மக்களின் கண்களுக்கு தலப்பாகட்டி பிரியாணி விருந்து மட்டும் கேரன்டி! 


Post your comment





Related News
அல்லரி நரேஷிற்கு மாமனாரான மோகன் பாபு
ஜூலை 17ல் திரைக்கு வரும் அல்லரி நரேஷின் ஜேம்ஸ் பாண்ட்
தெலுங்கானா முதல்வருக்கு திருமண அழைப்பு கொடுத்த அல்லரி நரேஷ்
மே 14 ஆம் திரைக்கு வரும் அல்லரி நரேஷ் பட பாடல்கள்
இணையத்தில் வெளியான அல்லரி நரேஷ் திருமண புகைப்படம்
காமெடி கிங் அல்லேரி நரேஷின் அடுத்த கலக்கல்
ஆண்\' கார்த்திகா...\'பெண்\' நரேஷ்...??
ஷகீலா இயக்கிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions