கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!

Bookmark and Share

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம்,  தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

பிறகு ,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்,செயலாளர்கள் கதிரேசன், S.S.துரைராஜ்,  நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி,  மற்றும்   தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன்,  நடிகர் நடிகைகள் சுஹாசினி, ரேவதி, லிஸி, சரண்யா பொன்வண்ணன், குஷ்பூ, ஷீலா, காஞ்சனா, அம்பிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீப்ரியா, விக்ரம் பிரபு, ராதாரவி, குட்டிபத்மினி, ஜீவா, கணேஷ், ஆர்த்தி, மற்றும் அனைத்து சங்கங்களைச் சார்ந்தவர்களும் மறைந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நாசர் பேசும்போது,

ஒரு தனி மனிதரின் ஒரு தலைமுறை முடிந்திருக்கிறது, ஒரு சகாப்தம் முடிந்திருகிறது, தொண்ணுறு ஆண்டுகளிலேயே இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தது போல் செயல்கள் செய்திருக்கிறார். பாடம் நடத்தியிருக்கிறார் என்பதை விட, பாடமாக இருந்திருக்கிறார் என்பதே பொருந்தும். சினிமா இந்தளவுக்கு தழைத்திருகிறது என்றால் அதற்கு கலைஞர் அவர்கள் தான் காரணம். இவ்வாறு பேசினார்.

எஸ்.பி.முத்துராமன் பேசும்போது,

அதுபோல இந்த காலத்தில் கலைஞர் வசனம் என்று பெயர் போட்டால் தான் படம் பார்க்கவே வருவார்கள். இறுதி காலத்தில் ராமானுஜர் அவர்களுக்கும் வசனம் எழுதினார்கள், கலை, பத்திரிக்கை, அரசியல், சினிமா மற்றும் எழுத்து போன்ற ஐந்து துறைகளிலும் ஜொலித்தவர் கலைஞர் என்று கூறினார்.

விஷால் பேசும்போது,

மாமனிதருக்கு மரியாதை செய்ய வேண்டியது நமது கடமை. பொது வாழ்க்கை, சினிமா, அரசியல், போன்ற எதுவாக இருந்தாலும், கலைஞர் அவர்களை மறக்க முடியாது. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டு வந்த முதல் தலைவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார். அவரைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

ராதாரவி பேசும்போது,

கலைஞர் என்ற பட்டப் பெயர் கொடுத்ததே எனது தந்தை எம்.ஆர்.ராதா அவர்கள் தான் என்பதை பெருமையுடன் கூறிகொள்கிறேன். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எல்லோரிடமும் பேசக்கூடிய ஒரு தலைவர். ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து தமிழ் மொழி, கலாச்சாரம், தமிழர்கள் இவையாவும் இருக்கும் வரை கலைஞர் இறக்க மாட்டார் என்றார்.

நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள்

தென்னிந்திய  நடிகர் சங்கம் பொது செயலாளர் 

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர்,பொது செயலாளர் விஷால்,பொருளாளர் கார்த்தி,துணை தலைவர் பொன்வண்ணன்.

செயற்குழு & நியமன செயற்குழு உறுபினர்கள்

பூச்சி முருகன்,குட்டி பத்மினி,லலிதா குமாரி,சிவகாமி,சோனியா,சங்கீதா, A.L.உதயா,நந்தா,ரமணா,ஸ்ரீமன்,ஹேமச்சந்திரன்,பிரேம்,ஆயுப் கான்,மருது பாண்டியன்,வாசுதேவன்,பசுபதி,அஜய் ரத்தினம்,M.A.பிரகாஷ் மற்றும் பலர்  

நடிகர்கள்

ரேவதி,ப்ரபா,ஷீலா,சுகாசினி,ஜீவிதா ராஜசேகரன்,ஸ்ரீபிரியா,குஷ்பு, அம்பிகா,லிஸ்ஸி,ஜோதி மீனா,காஞ்சனா,பசி சத்யா,ஆர்த்தி கணேஷ்,சஞ்சிதா செட்டி,சஞ்சனா சிங்,காயத்திரி,வசுந்தரா,மீனால்,சரண்யா பொன்வண்ணன்,

விஜயகுமார்,மயில் சாமி,விக்ரம் பிரபு,நட்டி நடராஜ்,ஜீவா,பாபி சிம்ஹா,கிருஷ்ணா,உதயநிதி ஸ்டாலின்,நிழல்கள் ரவி, J.P,ராதா ரவி, ராமகிரிஷ்ன்ன,சௌதர்ராஜன்,ப்ளாக் பாண்டி,கிர்ஸ்,ஆனந்த ராஜ்,Dr.ராஜசேகர்,மாரிமுத்து,மாஸ்டர் சோபி மற்றும் பலர்

தயாரிப்பாளர்கள்

தலைவர் விஷால், செயலாளர் கதேரேசன்,S.S.துரைராஜ்  

k.ராஜன்,KR,சோழர்,பொன்னுரங்கம்,R.B.சௌத்திரி,K.T.குஞ்சுமோன்,மயிலை குருபாதம்,ராஜேஸ்வரி,S.V.தங்கராஜ்,எடிட்டர் மோகன்,மிட்டாய் அன்பு,K.பார்த்திபன்,கலைபுலிதாணு, K.பாக்யராஜ்,திருமலை,பழனிவேல்,சண்முகம்,அசோக் மற்றும் பலர்

இயக்குனர்கள்

விக்ரமன்,ரமேஷ் கண்ணா,P.வாசு,பேரரசு,சந்தன பாரதி,சித்ரா லக்ஷ்மன்.

சின்னத்திரை கூடம்மைப்பு தலைவர் தளபதி, செயலாளர்N சிவன் ஸ்ரீநிவாசன்,

பிலிம் சேம்பர் L.சுரேஷ்,காற்றகர பிரசாத்  மற்றும் பலர் கலந்துகொண்டனர்பிறகு, தென்னிந்திய  நடிகர் சங்கம் பொது செயலாளர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன், S.S.துரைராஜ்,  தென்னிந்திய  நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, மற்றும் அனைத்து சங்கங்களைச் சார்ந்தவர்களும் மறைந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.இடம் காமராஜர் அரங்கம்,சென்னை


Post your comment

Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions