40 வயதில், 35 படங்கள், 74 விருதுகள் அதிரவைக்கும் டைட்டானிக் நாயகி

Bookmark and Share

40 வயதில், 35 படங்கள், 74 விருதுகள் அதிரவைக்கும் டைட்டானிக் நாயகி

ரோஸ் என்றாலே டைட்டானிக் படத்தின்  நாயகி கேட் வின்ஸ்லட்டின் ஞாபகம் வரும் அளவுக்கு எல்லாத் தலைமுறையினரும் ரசிக்க வைத்தவர்.

கதைக்காகவும், கேட் வின்ஸ்லட்'டிற்காகவும் மட்டும் ஹாலிவுட் படங்கள் பார்க்காதவர்கள் கூட, "டைட்டானிக்" படத்தை மட்டும் ஒரு முறையாவது பார்த்திருப்பார்கள். 

இவர் தன்னுடைய திரைப் பயணத்தை 1994 ஆண்டு "ஹெவன்லி கிரீச்சர்ஸ்" என்கிற திரைப்படத்தில் தொடங்கி பின், 1997ல் வெளியான ஜேம்ஸ் கேமரூனின் "டைட்டானிக்" இவருக்கு உலகப் புகழ் வாங்கித் தந்தது. ரொமான்டிக் படங்களோடு தன் நடிப்பை சுருக்கிக் கொள்ளமால், சைகலாஜிகல் த்ரில்லர், பயோக்ராஃபிகல் திரைக்கதை, குணச்சித்திர பாத்திரங்கள் என அனைத்திலும் தன் தடம் பதித்தார்.

இதற்கு இவர் நடித்த "ரெவால்யூஷனரி ரோட்", "லிட்டில் சில்ட்ரன்", "எடர்னல் சன்ஷைன் ஆப்ஃ ஸ்பாட்லஸ் மைண்ட்" ஆகிய படங்களே சாட்சி.  மிகக் குறைவான வயதில் ஆறு முறை "அகாடமி விருதிற்கு"ப் பரிந்துரைக்கப்பட்டவர்.

பாஃப்தா விருது, எம்மி விருது, அகாடமி விருது, கோல்டன் க்ளோப் விருது, க்ராமி விருது என கிட்டத்திட்ட ஹாலிவுட்டின் அனைத்து விருதுகளையும் வாங்கியவர். 

40 வயதாகும் ரோஸ் இது வரை 35 திரைப்படங்களில் நடித்து 74 விருதுகளைப் பெற்றுள்ளார். வரப்போகும் நூற்றாண்டுகளில் என்றும் அழியாத காதல் காவியத்தின் நாயகியாகி என்ற பெருமையை கேட் வின்ஸ்லட் பெற்றுவிட்டார்.


Post your comment

Related News
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
டைட்டானிக் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது டி கேப்ரியோ இல்லை, இவர் தான், பல நாள் ரகசியத்தை கூறிய கேட்
ரூ 1300 கோடியில் உருவான டைட்டானிக் கிடைத்த வசூல் மட்டுமின்றி தெரியாத பல தகவல்கள்
நயன்தாரா மீது புகார் !
ஆகஸ்டில் துவங்கும் வெங்கடேஷின் அடுத்த படம்
அடுத்தமாதம் வெங்கடேஷின் புதுப்பட அறிவிப்பு!
தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் வெங்கடேஷ்...
பிக்கு ரீமேக்கில் அப்பா-மகளாக சமந்தா, வெங்கடேஷ்...?
குறும்படங்களுக்கு பாதை அமைக்கிறது ரஷ்ய கலாச்சார மையம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions