கதிர் நடிக்கும் " ஜடா" படத்தின் டப்பிங் துவங்கியது!

Bookmark and Share

கதிர் நடிக்கும்

"பரியேறும் பெருமாள்" வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கதிர் நடித்திருக்கும் திரைப்படம் "ஜடா". அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தினை "பொயட் ஸ்டுடியோ" மற்றும் "சனா ஸ்டுடியோ" நிறுவனத்தினர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

இப்படத்தில் நடிகர் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரன் ஒருவனின்  வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசுகிற படமாக இதனை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட நிலையில், இப்போது படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.சூர்யா பணியாற்றியுள்ளார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்துள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை விரைவில்  வெளியாக இருக்கிறது.


Post your comment





Related News
ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்
நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா? என்னன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!
நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே!
இந்த வயசுலயும் இப்படியொரு அழகா? நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்!
கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்?
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions