‘கஜினி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடியது பற்றி ‘மெமெண்ட்டோ’ டைரக்டர் சொன்னது என்ன? - வீடியோ ஆதாரம்

Bookmark and Share

‘கஜினி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடியது பற்றி ‘மெமெண்ட்டோ’ டைரக்டர் சொன்னது என்ன? - வீடியோ ஆதாரம்

மீஞ்சூர் கோபி என்ற உதவி இயக்குநரின் ‘மூத்தகுடி’ கதையைத்திருடி ‘கத்தி’ படத்தை எடுத்துவிட்டார் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை உலகமே கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறது.

கத்தி தன்னுடைய கதைதான் என்று மீஞ்சூர் கோபி எடுத்து வைக்கும்  வாதங்களுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் கனத்த மௌனத்தையே பதிலாக தந்தார்.

கத்தி படத்தின் கதைத்திருட்டு விவகாரம் இப்படியாக பத்தி எரிந்து கொண்டிருக்கும்நிலையில், 

கஜினி கதையைத் திருடிய விஷயத்திலும் ஏ.ஆர்.முருகதாஸ் அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டுப்போன விவகாரம் தற்போது தெரிய வந்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் அதாவது 2005 ஆம் ஆண்டு தமிழில் சூர்யாவை வைத்து கஜினி என்ற படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்தப் படம் Christopher Nolan இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான மெமெண்ட்டோ Memento என்ற ஹாலிவுட் படத்திலிருந்து திருடப்பட்ட கதை என்ற தகவல் அப்போதே ஆதாரங்களுடன் வெளியானது.

தமிழில் கஜினி படம் வெற்றியடைந்ததைத்தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு ஹிந்தியில் அமிர்கானை வைத்து அப்படத்தை ரீமேக் செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் ‘கஜினி’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

‘மெமெண்ட்டோ’ படத்தை சுட்டு தமிழில் கஜினி படத்தை எடுத்தது வேண்டுமானால் அப்படத்தின் இயக்குநருக்கோ, தயாரிப்பு நிறுவனத்துக்கோ தெரியாமல் இருந்திருக்கலாம்.

கஜினி ஹிந்தியில் வெளியான பிறகும் கூடவா மெமெண்ட்டோ இயக்குநர் கிறிஸ்ட்டோபர் நோலனுக்கு தன் கதையை திருடியது தெரியாமல் போனது? என்று கேள்வி பலருக்கும் எழுந்திருக்கக் கூடும்.

இக்கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.

பாலிவுட் நடிகர் அனில்கபூர் தன் ஹாலிவுட் பயணம் பற்றி பிரபல ஆங்கிலத்தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்பேட்டியில் மெமெண்ட்டோ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடி கஜினி படமாக எடுத்தது பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதாவது, மெமெண்ட்டோ கதையைத் திருடி படம் எடுத்தவர்கள் தன் பெயரையும் போடவில்லை, தனக்கு பணமும் கொடுக்கவில்லை என்று அனில்கபூரிடம் வருத்தப்பட்டாராம் மெமெண்ட்டோ படத்தின் இயக்குநர் கிறிஸ்ட்டோபர் நோலன் (No credit, No money, no nothing.).

அவரது வருத்தத்தை தான் அமிர்கானிடம் சொன்னதாகவும் அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார் அனில்கபூர்.

தமிழனின் மானத்தை ஹாலிவுட் முதல் காபரேசன் வரை பறக்கவிட்ட ஏ.ஆர்.முருகதாஸுக்கு தமிழ்நாடும், தமிழ் கூறும் நல்லுலகும் கடமைப்பட்டிருக்கிறது.

அனில்கபூரின் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக்குங்கள்…

https://www.youtube.com/watch?v=fL6k_NdxlHs

OR

https://www.youtube.com/watch?v=ugMgEytkG70

OR

http://ibnlive.in.com/videos/128048/watch-anil-kapoors-hollywood-journey.html


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions