பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்

Bookmark and Share

பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்

தனது சகோதரிகள் இருவரை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்குமாறு நடிகை கத்ரீனா கைஃப் தனது முன்னாள் காதலர் சல்மான் கானிடம் கேட்டுள்ளாராம். 

கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் நுழைந்து தடுமாறியபோது சல்மான் கானின் காதலியானார். அதன் பிறகு பாலிவுட்டில் அவரின் வளர்ச்சி அமோகமாக இருந்தது. 

வளர்ந்த பிறகு சல்மான் கானை பிரிந்த கத்ரீனா நடிகர் ரன்பிர் கபூரின் காதலியானார். தற்போது ரன்பிரையும் பிரிந்துவிட்டு சிங்கிளாக நிற்கிறார்.

கத்ரீனா தன்னை விட்டுப் பிரிந்து சென்றாலும் அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்கிறார் சல்மான். இதனால் கத்ரீனா சல்மானின் காதலியாக இல்லாவிட்டாலும் அவரின் பாதுகாப்பில் தான் இருக்கிறார் என்பது பாலிவுட்டுக்கு தெரியும்

சல்மானும், கத்ரீனாவும் சேரந்து அலி அப்பாஸ் ஜாபரின் இயக்கத்தில் டைகர் ஜிந்தா ஹை படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்கள். இது சல்மான், கத்ரீனா நடிப்பில் வெளியான ஏக் தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமாம்.

கத்ரீனாவுக்கு தனது சகோதரிகளான இசபெல் மற்றும் சோனியாவை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க ஆசை. அவர்களை வெயிட்டான ஆள் அறிமுகம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தவருக்கு சல்மான் கான் நினைவு வந்தது.

சல்மான் கானை அணுகி தனது சகோதரிகளை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளாராம் கத்ரீனா. சல்மானும் கத்ரீனாவின் வேண்டுகோள் குறித்து யோசித்து வருகிறாராம்.

 


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
பிரபல நடிகையிடம் ஹாய் சொல்ல நீண்ட நேரம் காத்திருந்த விஜய் – இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions