பேஸ்புக்கில் காவ்யா மாதவன் பெயரில் போலி கணக்கு

Bookmark and Share

பேஸ்புக்கில் காவ்யா மாதவன் பெயரில் போலி கணக்கு

சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பாமரன் முதல் பிரபலங்கள் வரை இணைந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். பிரபலங்களின் சமூக வலைதளங்களை பின்பற்றுபவர்கள், பாராட்டு தெரிவிப்பவர்கள் அதிகம் என்பதால் இந்த இணையதளங்களை பார்வையிடுபவர்கள் அதிகமாக உள்ளனர்.

இதை பயன்படுத்தி பிரபலமானவர்களின் பெயரில் பல்வேறு போலி சமூக வலைதளங்களும் தொடங்கப்பட்டு அவர்கள் பெயரில் அவதூறு கருத்துக்களை வெளியிடும் சம்பவங்களும் அதிகரித்து வந்தது. நடிகர்–நடிகைகள் பெயரில் தான் இது போல பல போலி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது. 

பிரபல மலையாள நடிகையான காவ்யா மாதவனும் தற்போது இந்த பிரச்சினையில் சிக்கியுள்ளார். அவரது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு அதில் ஆபாச கருத்துக்களும் அடிக்கடி வெளியிடப்பட் டன.

நடிகை பெயரிலான பேஸ்புக் தளம் என்று நம்பி அதை பார்வையிட்ட பலரும் ஆபாச கருத்துக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது நடிகை காவ்யா மாதவன் கவனத்துக்கும் கொண்டுச் செல்லப்பட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது பற்றி கொச்சி போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து கொச்சி தனிப்பிரிவு போலீஸ் துணை உதவி கமி‌ஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சைபர் செல் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தைச் சேர்ந்த அரவிந்த் பாபு என்பவர் இந்த போலி கணக்கை தொடங்கி உள்ளது தெரிய வந்தது. அவரது நண்பர்கள் ஒருவரின் ஆவணங்களை திருடி இந்த கணக்கை தொடங்கி ஆபாச கருத்துக்களை வெளியிட்டதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அரவிந்த் பாபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. காவ்யாமாதவன் பெயரில் மேலும் பல போலி கணக்குகள் உள்ளதாகவும், பிரபல நடிகைகள் பலர் பெயரிலும் இது போல போலி கணக்குகள் தொடங்கப்பட்டு செயல்படுவதாகவும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

இந்த போலி கணக்குகளை கண்டுபிடித்து அதன் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

 


Post your comment

Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions