தமிழ் எழுதி படிக்கும் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

தமிழ் எழுதி படிக்கும் கீர்த்தி சுரேஷ்!

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஓரளவு தமிழ் பேசி விடுவார்கள். ஒரு கட்டத்தில் தங்களுக்கு தாங்களே டப்பிங் பேசும் அளவுக்கு முன்னேறி விடுவார்கள்.

ஆனால், தற்போது ரஜினி முருகன், பாம்பு சட்டை, இது என்ன மாயம் படங்களில் நடித்து வரும் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் நடிகைகள் போன்று நன்றாக தமிழ் பேசுகிறார். அவரது பேச்சில் மலையாள வாசணையே இல்லை.

எப்படி இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள்? என்று அவரைக்கேட்டால், நான் கேரள நடிகை என்றபோதும், எனது அம்மா மேனகா நடிகை என்பதால் எங்களுக்கு சென்னையிலுள்ள எம்எம்டிஏ காலணியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது.

அதனால் நாங்கள் அடிக்கடி அந்த வீட்டிற்கும் வந்து தங்கிச்செல்வோம். அப்படி இருந்ததால் எனக்கு சின்ன வயதிலேயே தமிழ் பேச தெரிந்து விட்டது. அதோடு, தமிழ் எழுத படிக்கவும் தெரியும்.

பள்ளியில் தமிழ் படித்ததில்லை என்றாலும், எனது சென்னை தோழிகளிடம் தமிழ் எழுத்துக்களை கேட்டு தெரிந்து கொண்டேன். அதோடு காரில் செல்லும்போது சாலைகளின் இரண்டு பக்கமும் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில் உள்ள தமிழ் எழுத்துக்களை எழுத்துக்கூட்டி படிப்பேன்.

இப்படியே என்னை வளர்த்துக்கொண்டேன். அதனால் இப்போது நன்றாக தமிழ் எழுதி படிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்று விட்டேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.


Post your comment





Related News
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions