நான் அதிக சம்பளம் கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

நான் அதிக சம்பளம் கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில், தற்போது அனைத்து ஹீரோக்களின் பார்வையும் கீர்த்தி சுரேஷ் மீதுதான் இருக்கிறது. தமிழில் நடித்த ஒரு படம் கூட இன்னும் வரவில்லை. அதற்குள் ரஜினி முருகன், இது என்ன மாயம், பாம்பு சட்டை ஆகிய படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர், அடுத்து தனுஷ் ஜோடியாக பிரபு சாலமன் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அதற்கடுத்து பாண்டிராஜ், விஷாலை வைத்து இயக்கப் போகும் படத்திலும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷிடம் பேசி வருகிறார்களாம். இத்தனை படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷைப் பார்த்து மற்ற நடிகைகளே பொறாமைப்பட்டுத்தான் இருக்கிறார்களாம்.

இந்நிலையில் ரஜினி முருகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ், நமக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது, இன்னும் நான் நடித்த படங்கள் ஒன்று கூட ரிலீஸாகவில்லை, ஆனால் இவ்வளவு படம் எப்படி கமிட்டானேன் என்றே தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் கடவுள் தான் காரணம். நான் நிறைய சம்பளம் கேட்பதாக செய்திகள் வந்தது.

ஆனால் நான் இன்னும் 40 லட்சத்தை கூட தாண்டவில்லை. என் மீது தவறான அபிப்ராயம் உருவாகியுள்ளது என்று கூறினார். 


Post your comment





Related News
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions