முன்னணி ஹீரோயினிகளுக்கு ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

முன்னணி ஹீரோயினிகளுக்கு ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

மாஜி நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷின் கைவசம் தற்போது இது என்ன மாயம், பாம்பு சட்டை, ரஜினிமுருகன், கவலை வேண்டாம் ஆகிய படங்களில் நடித்த வருகிறார். இதுதவிர பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார்.

ஆக, தமிழில் நடித்த முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகைகளுக்கெல்லாம் பலத்த அதிர்ச்சி கொடுத்து விட்டார் கீர்த்தி சுரேஷ். மேலும், அடுத்தபடியாக மேல்தட்டு ஹீரோக்களுடனும் நடித்து விட வேண்டும் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறார் அவர்.

அதேசமயம், சில நடிகைகளைப்போன்று முன்னணி நடிகர்களின் படவாய்ப்பு என்றால் கதைக்கேற்ப கவர்ச்சியாக நடிப்பேன் என்று அவர் தனது கண்டிசனை தளர்த்திக்கொள்ளவில்லை. முன்னணி ஹீரோக்களின் படம் என்றாலும், கிளாமராக நடிக்க மாட்டேன்.

இந்த விசயத்தைப்பொறுத்தவரை மாற்றி பேசும் பழக்கமெல்லாம் இல்லை. முதலில் சொன்னதுதான் இறுதிவரை. மாடர்ன் டிரஸ் அணிந்து நடிப்பேன். அதுதான் எனது கவர்ச்சி எல்லை.

அதை தாண்டி கிளாமராக நடிக்கும் ஐடியா எதுவும் இல்லை என்கிறார். கீர்த்தி சுரேஷ் இப்படியொரு கண்டிசனை உறுதியாக முன் வைத்தபோதும், அவருக்கு அடுத்தடுத்து படங்கள் புக்காக்கி வருவது பலருக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.


Post your comment





Related News
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions