படங்களுக்கு எதிராக வழக்கு போடுகிறவர்களை தடுக்க கேயார் புது யோசனை

Bookmark and Share

படங்களுக்கு எதிராக வழக்கு போடுகிறவர்களை தடுக்க கேயார் புது யோசனை

சமீபகாலமாக திரைப்படங்கள் வெளிவரும்போது யாராவது ஒருவர், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வழக்கு போட்டு அந்த படத்திற்கு இடையூறு செய்கிறார். இதை தடுக்க தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார் ஒரு புதிய யோசனையைக் கூறினார்.

பிரேம்ஜி ஹீரோவாக நடித்து இசை அமைக்கும் மாங்கா படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று (ஏப் 1) நடந்தது.

இதில் கலந்து கொண்டு கேயார் பேசியதாவது:

இன்றைக்கு சினிமாவுக்கு பெரிய பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக சினிமா வளர்ந்து வந்தாலும். அதை சுற்றி பிரச்னைகளும் வளர்ந்து வருகிறது. கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுத்தால் கடைசி நேரத்தில் என்னுடைய தலைப்பு, என்னுடைய கதை என்று கூறியோ அல்லது வேறு காரணங்களை சொல்லியோ வழக்கு போட்டு நிறுத்த பார்க்கிறார்கள்.

இதனால் தயாரிப்பாளருக்கு மனவேதனை வருவதோடு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கு போடலாம். அது அவர்கள் உரிமை. அதை மதிக்க வேண்டும்.

அப்படி வழக்கு போடுகிறவர்களிடம் படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் முன்பணத்தை நீதிமன்றம் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். வழக்கு போடுகிறவர் தனது குற்றச்சாட்டை நிரூபித்த பிறகு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இப்படி ஒரு நடைமுறையை கொண்டு வர திரையுலக பிரமுகர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து பேச வேண்டும். மற்றபடி எல்லா சங்கங்களும் ஒன்றிணைந்து போராடினாலும் அதனால் எந்த பயனும் இல்லை. இவ்வாறு கேயார் பேசினார்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.சி.கே.சக்திவேல், நடிகைகள் அத்வைதா, லீமா, ரேகா நடிகர்கள் இளவரசு, வைபவ், இசை அமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, கங்கை அமரன், பவதாரினி, இயக்குனர்கள் வெங்கட்பிரபு, ஷக்தி சிதம்பரம். வி.சேகர், படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.ராஜா, தொழிலதிபர் எச்.வசந்த குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post your comment

Related News
சென்சார் அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்: கேயார் புகார்
ரஜினியுடன் போட்டி போடுவது தற்கொலைக்கு சமம்: படவிழாவில் கேயார் பேச்சு
எம்ஜிஆர், சிவாஜி வரிசையில் அடுத்து விஜய் சேதுபதிதான்-கேயார்..!
கேயாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!
நடிகைகள் சம்பளத்தில் 20 சதவீதம் நிறுத்தப்படும்-கேயார்அதிரடி முடிவு..!
நடிகர் விஜய்யை தாக்கி பேசினாரா? கேயார் - கோடாம்பாக்கத்தில் பரபரப்பு.
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions