அதுக்குள்ள இப்படியா – மாஸ் காட்டிய கார்த்தி!

Bookmark and Share

அதுக்குள்ள இப்படியா – மாஸ் காட்டிய கார்த்தி!

கைதி படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாம். இப்படம் குறுகிய கால படமாக உருவாகியுள்ளது.தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கார்த்தியின் கேரியரில் தேவ் ஒரு சின்ன சறுக்கலை சந்தித்தது.

அதன் பின் சுதாரித்துக் கொண்ட கார்த்தி, தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடித்து வருகிறார்.அந்த வகையில் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாம். இப்படம் குறுகிய கால படமாக உருவாகியுள்ளது. படம் முழுக்க சிறைக்குள் நடக்கும் கதை என்பதால் சீக்கிரம் முடித்துவிட்டார்களாம்.

மேலும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியே கிடையாதாம்.படப்பிடிப்பு முடிந்ததால் படம் சீக்கிரம் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions