கோ இரண்டாம் பாகத்தில் பிரகாஷ்ராஜூடன் இணையும் பாபி சிம்ஹா

Bookmark and Share

கோ இரண்டாம் பாகத்தில் பிரகாஷ்ராஜூடன் இணையும் பாபி சிம்ஹா

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘கோ’. அரசியல் பின்னணியில் திரில்லர் படமாக வெளிவந்த இப்படத்தில் ஜீவா-கார்த்திகா நாயர் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் 2011-ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தை எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில், அதே நிறுவனம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளது. ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா ஹீரோவாகவும், டார்லிங் பட நாயகி நிக்கி கல்ராணி ஹீரோயினாகவும் நடிக்கவிருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். சரத் என்பவர் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கின்றனர். ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக பாபி சிம்ஹா தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார். இதையடுத்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது, இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ!
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
கிரிக்கெட் விளையாடியதால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த விபரீதம் – என்ன தெரியுமா?
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் - நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளரின் உருக்கமான டிவீட்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
சூப்பர் ஸ்டார் படத்தால் கடும் சிக்கலில் விஜய் தேவரகொண்டா – ஏன்னு அவரே சொன்ன பதில பாருங்க!
தல பிறந்தநாள் ஸ்பெஷலாக நேர்கொண்ட பார்வை டீசர் நாளை வருகிறதா? உறுதியானத் தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions