'கொக்கி குமார்' வயது 10... !

Bookmark and Share

'கொக்கி குமார்' வயது 10... !

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2006ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி வெளிவந்த படம் 'புதுப்பேட்டை'. இந்தப் படத்தில் 'கொக்கி குமார்' என்ற ரவுடி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் 'ரவுடியிசம்' சம்பந்தப்பட்ட ஒரு முழுமையான படம் என்ற பெயரை இந்தப் படம் பெற்றது. செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ''காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி” ஆகிய படங்களுக்குப் பிறகு அவருக்கு பெயரை வாங்கித் தந்த படம் இது.

சாதாரண பள்ளி மாணவனாக இருந்து ஒரு பெரிய ரவுடியாக தனுஷ் உருவெடுக்கும் கதைதான் இந்தப் படம். மிக இளவயதில் தனுஷ் இப்படிப்பட்ட ஒரு கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது தவறு என்று அப்போது பலத்த விமர்சனம் எழுந்தது. இருந்தாலும் இந்தப் படத்தின் கதாபாத்திரமான 'கொக்கி குமார்' இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.  

அதனால்தான் சமீபத்தில் வெளிவந்த 'வை ராஜா வை' படத்தில் கூட 'கொக்கி குமார்' கதாபாத்திரம் மூலம் கிளைமாக்சில் தனுஷ் என்ட்ரி கொடுத்தார்.

தன் படத்தைப் பற்றியும், தன்னைப் பற்றியும் அடிக்கடி ஏதாவது டிவீட் செய்து கொண்டிருக்கும் தனுஷ், இந்த 'கொக்கி குமார்' படத்து வருடம் நிறைவு செய்ததைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. மே 26 அன்று  அவருடைய புதுப்படத்தைப் பற்றித்தான் சொன்னாரே தவிர 'கொக்கி குமார்' பற்றி சொல்ல மறந்து விட்டார்.


Post your comment





Related News
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions