பாட்டிகளை ஏமாற்றிய கொம்பன்!

Bookmark and Share

பாட்டிகளை ஏமாற்றிய கொம்பன்!

கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்தின் கதை மதுரைப்பின்னணியில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. சில நாட்கள் மதுரை பகுதியில் படப்பிடிப்பு நடத்திவிட்டு, மீதி காட்சிகளை சென்னையில் படப்பிடிப்பு நடத்தி படமாக்கி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் சென்னையில் கொம்பன் படப்பிடிப்பு நடைபெற்றபோது, மதுரையிலிருந்து வயதான பாட்டிகள் சுமார் 20 பேரை அழைத்து வந்துள்ளனர். சாப்பாடு கொடுத்து ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக ஆசையைக்காட்டி 20 பாட்டிகளையும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

நான்கு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அந்த பாட்டிகளுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால், அவர்களை கூட்டிக்கொண்டு வந்த ஏஜென்ட் நான்கு நாட்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்து கோயம்பேட்டில் பஸ் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். பஸ் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு சம்பளத்தையே கொடுத்துள்ளனர்.

நாங்க ஊர விட்டு கிளம்பி ஒரு வாரம் ஆச்சு! நாலு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க! கடைசியில பார்த்தா தலைக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்காங்க! எங்களை கூட்டிட்டு வந்த எங்க ஆளுங்க ஏதும் கூடுதலா வாங்கி நமக்கு கொடுக்காம விட்டுட்டாங்களான்னு தெரியலை. அங்கேயே சொல்லியிருந்தா கம்பெனிக்காரங்ககிட்ட கேட்டிருப்போம்! ஏமாத்திட்டாங்க!" என்று பஸ் மதுரை போய்ச் சேரும் வரை புலம்பிக்கொண்டே சென்றுள்ளனர் 20 பாட்டிகள்.


Post your comment





Related News
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
நித்யா மேனனின் திடீர் முடிவு
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions