நள்ளிரவில் கோவை சரளாவை அழைத்த கே.பாக்யராஜ்

Bookmark and Share

நள்ளிரவில் கோவை சரளாவை அழைத்த கே.பாக்யராஜ்

தமிழ்த் திரையுலகில்  நகைச்சுவை நடிப்பில் மனோரமாவிற்குப் பிறகு கோவை சரளா மட்டுமே இன்று வரை தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். நகைச்சுவை நடிப்பில் எண்ணற்ற நடிகர்கள் வந்தாலும், நடிகைகளின் வரவு குறைவாகவே உள்ளது.

பாக்யராஜ் இயக்கி 1983ம் ஆண்டு வெளிவந்த 'முந்தானை முடிச்சு' படம் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானவர் கோவை சரளா. அந்தப் படத்தில் சரளாவை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ் அறிமுகப்படுத்தியிருப்பார்.

ஆனால், அடுத்து அவர் இயக்கிய 'சின்ன வீடு' படத்தில் பாக்யராஜுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பை கோவை சரளாவிற்கு அளித்து அவரை புகழின் உச்சியில் ஏற்றி வைத்தார்.

அந்தப் படத்தில் நடிக்க வைப்பதற்காக நள்ளிரவில் கோவை சரளாவை அழைத்தாராம் பாக்யராஜ். இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கோவை சரளா கூறியதாவது, “நான் சென்னைக்கு வந்த புதிது, 'முந்தானை முடிச்சு'  படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன்.

ஒரு நாள் நள்ளிரவில் 12 மணியிருக்கும், பாக்யராஜ் அனுப்பினார் என ஒருவர் வந்து வீட்டுக் கதவைத் தட்டினார். நான் பயந்து கொண்டு ஜன்னலை மட்டுமே திறந்து, இந்த நேரத்தில் வந்து கூப்பிடுகிறீர்களே, நான் வர மாட்டேன், போய் விடுங்கள் என்று சொன்னேன்.

ஆனால், என்னுடைய அப்பாதான், வந்திருப்பவர் வயதானவர், பாக்யராஜ் சார் எதற்கு அழைத்தாரோ தெரியவில்லை, போய் பார்க்கலாம் என்றார். அதன் பிறகே அவரது அலுவலகத்துக்குச் சென்றோம்.

அப்போது அவருடைய அலுவலகத்தில் நிறைய பேர் வயதான மேக்கப் போட்டு அமர்ந்து கொண்டிருந்தார்கள். எதற்கு இவ்வளவு பேர் இருக்கிறார்கள், ஏதோ டெஸ்ட் நடக்கிறது என்று நானும் உள்ளே போனேன்.

என்னை உட்கார வைத்து வயதான மேக்கப் போட்டார்கள். எதற்கு எனக்கு இப்படி வயதான மேக்கப் போடுகிறீர்கள் என்றேன்.  பாக்யராஜ் சார் வந்து இந்தப் படத்துல எனக்கு நீதான் அம்மாவா நடிக்கப் போறே என்றார். நான் அம்மாவாக எல்லாம் நடிக்க மாட்டேன் என்றேன்.

இந்தப் படத்தில் நடித்தால் உனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லி வற்புறுத்தி நடிக்க வைத்தார். படம் வெளிவந்த பின் உண்மையிலேயே எனக்கு பெரிய பெயர் கிடைத்தது.  

அதன் பிறகுதான் என்னை தமிழ் ரசிகர்களுக்கும் அதிகமாகத் தெரிய வந்தது,” என கோவை சரளா சொல்லியிருக்கிறார். பாக்யராஜ், கோவை சரளாவை, நள்ளிரவில் வரவழைத்து மேக்கப் போட்டு நடிக்க வைத்த படம் 'சின்ன வீடு'.

அந்தப் படத்தில் பாக்யராஜின் அம்மாவாக நடித்த பின்தான் கோவை சரளாவிற்கு மிகப் பெரிய திருப்புமுனை கிடைத்தது. 'கோவா....லு...' என பாக்யராஜை கோவை சரளா கூப்பிடுவதை இன்றும் மறக்க முடியாது.


Post your comment

Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
“பாண்டியராஜனே கவலைப்பட்டால் நான் எங்கே போவது..?” நெகிழ்ந்த பாக்யராஜ்..!
வாணி ராணி சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
விஜய்க்காக பாட்டு பாடிய பிரபல நடிகைக்கு வந்த நிலைமை - அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.!
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions