உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா

Bookmark and Share

உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா

தமிழ் சினிமா கதாநாயகிகளில் புன்னகை அரசி என்ற பெருமையை பெற்றவர் கே.ஆர்.விஜயா. சிலகாலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் “கோடீஸ்வரி” என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் இளவரசன். மீண்டும் நடிப்பது பற்றி கே.ஆர்.விஜயா அளித்த பேட்டியில் ’பணத்தேவையை எதிர்பார்த்து ஒருபோதும் சினிமாவில் நடிக்கும் நிலை எனக்கு வரவில்லை. சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

முன்பு பரபரப்பாக நடித்துவிட்டு இருந்ததால் அப்போதைய புகழை நினைச்சு சந்தோ‌ஷப்பட நேரம் இல்லை. இப்போதுதான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. என் கணவர் `உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடி. யாரை பற்றியும் கவலைப்படாதே. எப்போதும் பூ, பொட்டு வைத்துக்கொள்.

உனக்கு பிடித்த மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோ‌ஷமா இரு’னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார். அதனாலதான் தொடர்ந்து சினிமாவைவிட்டு விலகாம செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கேன்’. இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions