சூப்பர் ஸ்டாரை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்!

Bookmark and Share

சூப்பர் ஸ்டாரை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்!

1990ல் புரியாத புதிர் படத்தில் இயக்குனரான அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார். அதைத்தொடர்ந்து விஜயகுமார், சரத்குமாரை வைத்து அவர் இயக்கிய சேரன் பாண்டியன் படம் அவருக்கு மெகாஹிட்டாக அமைந்தது.

பின்னர் அவர் இயக்கிய நாட்டாமை அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனால், ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கி முன்னணி இயக்குனரானார் ரவிக்குமார்.

மேலும், ரஜினியை வைத்து படையப்பா, முத்து படங்களை இயக்கிய அவர், லிங்கா படத்தையும் இயக்கினார். ஆனால், எதிர்பார்த்தபடி அப்படம் வெற்றி பெறவில்லை.

இருப்பினும், ரஜினி படத்திற்கு முன்பே நான் ஈ சுதீப்பை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக கூறி வந்த ரவிக்குமார், பின்னர் ரஜினியின் கால்சீட் கிடைத்ததால் சுதீப் இயக்குவதை தள்ளி வைத்து விட்டு ரஜினி பட வேலைகளில் இறங்கினார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் ரவிக்குமாருக்கு கால்சீட் கொடுத்திருக்கிறார் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப். தற்போது கன்னடத்தில் ரேட் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவர், அப்பட வேலைகள் ஜூன் மாதம் முடிவடைவதால், ஜூலை மாதம் முதல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம்.

இந்த படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் தயாராகிறது. அதனால், தற்போது தனது படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகளை பரிசீலனை செய்து வரும் ரவிக்குமார், சில முன்னணி ஹீரோயினிகளிடமும் கால்சீட் கேட்டு வருகிறார்.

 


Post your comment





Related News
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions