குமரிமுத்துவின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

Bookmark and Share

குமரிமுத்துவின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் குமரிமுத்து நேற்று இரவு சென்னையில் காலமானார். இவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் குமரிமுத்து மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், தன்னுடைய நடி​​ப்பாலும், மறக்கமுடியா தனிப்பட்ட சிரிப்பாலும் நம்மோடு பயணித்த அண்ணன் குமரிமுத்து அவர்கள் ​​இன்று நம்மை ​விட்டு ​பிரிந்தார். அதற்காக மனம் வருந்துகிறோம்.​ 

அவரை இழந்து வாடும் ​அவருடைய ​உற்றார்க்கும்,​ சு​​ற்றத்தார்க்கும் எங்கள் ஆறுதலை சமர்ப்பி​க்​கிறோம்.

இந்​த நேரத்தில் அவர் சங்கத்தி​ற்​கு ஆற்றிய அ​று​ம்பணிகளையும் சங்க நலத்திற்காக குரல் கொடுத்து போராடியதையும் நியமன செயற்குழு உறு​ப்​பினராக எங்களோடு செயல்பட்டு முன்னேற்றத்திற்கான பல்வேறு யோசனைகளை ​சமீபகாலம் வரையிலும் ​ வழங்கியதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். 

நிறைவு செய்யமுடியா ஒரு வெற்றிடத்தை விட்டு சென்றிருக்கும் அவர் சங்கத்திற்காக கண்ட கனவுகளை நனவாக்குவது ஒன்றே அவர் ஆத்துமாவுக்கு செலுத்துகின்ற மலர்வளையமாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர் மற்றும் துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் மறைந்த நடிகர் குமரிமுத்துவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் நடிகர் செந்திலும் குமரிமுத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.


Post your comment

Related News
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
தமிழாற்றுப்படை வரிசையில் தொல்காப்பியர் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்!
இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு - கவிஞர் வைரமுத்து இரங்கல்
காவிரி மேலாண்மை வாரியம் - வைரமுத்து கண்டனம்
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!
தமிழ் சமூகம் என்னை சந்தேகப்படலாமா? கவிஞர் வைரமுத்து வேதனை
வைரமுத்துவின் பிச்சையில் வளர்ந்தவர் ரஜினி, இப்படி செய்யலாமா? - சீமான் ஆவேச பேச்சு.!
வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி !
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து: கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக வழக்குப்பதிவு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions