குஞ்சாக்கோ போபனிடம் அலட்சியம் காட்டிய டிரைவர்..!

Bookmark and Share

குஞ்சாக்கோ போபனிடம் அலட்சியம் காட்டிய டிரைவர்..!

படத்தில் நடக்கும் சம்பவங்களை விட, சிலசமயம் நிஜத்தில் சுவராஸ்யமாக சில விஷயங்கள் நிஜத்தில் பல ஹீரோக்களுக்கு நடப்பதுண்டு. இது மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனுக்கு  மட்டும் அடிக்கடி நடக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன் துபாயில் படப்பிடிப்பிற்காக போன இடத்தில் குஞ்சாக்கோவை கார் டிரைவர் என நினைத்து ஒரு சிலர் சவாரிக்காக கூப்பிட்டர்களாம். காரணம் அந்தப்படத்தில் டாக்ஸி டிரைவராக நடிக்கும் குஞ்சாக்கோ, யூனிபார்முடன் ஒரு கால் டாக்சியில் அமர்ந்திருந்ததால் அவரை அடையாளம் தெரியவில்லையாம்.. தற்போது 'சிறகொடிஞ்ச கினாவுகள்' படத்தில் குஞ்சாக்கோ போபன் கிராமத்து டெய்லராகவும், கல்ப் ரிட்டர்ன் மலையாளியாகவும் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பிலும் ஒரு சுவராஸ்யம் அரங்கேறியிருக்கிறது. கல்ப்காரான் என்கிற பணக்கார மலையாளியாக நடிக்கும் குஞ்சாக்கோ படத்தில் உபயோகப்படுத்துவதற்காக ஒரு விலையுயர்ந்த காரை வரவழைத்திருந்தார்கள்.

அதன் டிரைவரிடம் இது குஞ்சாக்கோ பயன்படுத்தும் கார், அவர் வரும்போது சாவியை கொடுங்கள் என சொல்லியும் விட்டார்கள். கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு முன் நடைபெறும் கதை என்பதால் படத்தில் குஞ்சாக்கோவின் கெட்டப்பில் நிறையவே வித்தியாசம்.

அந்த கெட்டப்புடன் அவர் திடீரென லொக்கேசனில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வந்து அமர்ந்தாராம். ஆனால் அவர் தான் குஞ்சாக்கோ என டிரைவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனால் அவர் தொடர்ந்து குஞ்சாக்கோ வருகிறாரா என வழியை பார்த்தபடி இருக்க, குஞ்சாக்கோவும் அவரை கண்டுகொள்ளாமல் கம்மென்று அமர்ந்திருந்தாராம். கொஞ்ச நேரம் ஆனதும் சலிப்பான  ட்ரைவர், குஞ்சாக்கோ பக்கம் திரும்பி, “எங்கேப்பா சாக்கோச்சன் வர்றதா சொன்னாங்க.. நேரம் ஆகுது.. ஆளையே காணலையே”ன்னு அவர்கிட்டேயே கேட்டாராம்.

அதைக்கேட்டு  குஞ்சாக்கோ விஷமமாக சிரிக்கவே, அந்த சிரிப்பை கண்டு அதன்பின் கவனித்து பார்த்ததும் தான் டிரைவருக்கு உண்மை தெரிந்ததாம். இது எப்படி இருக்கு..?

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions