டிவிட்டரைக் கலக்கிய 'குட்டி தல'- டிரெண்டிங்கில் முதலிடம்!

Bookmark and Share

டிவிட்டரைக் கலக்கிய 'குட்டி தல'- டிரெண்டிங்கில் முதலிடம்!

சமூக வலைத்தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதில் அஜித் ரசிகர்களை மிஞ்ச ஆளே இல்லை என பல முறை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அஜித்தின் படங்கள் வெளிவரும் போதும், டிரைலர் வெளியாகும் போதும், டீசர் வெளியாகும் போதும், இசை வெளியாகும் போதும் அஜித் சம்பந்தப்பட்ட தகவல்களை, செய்திகளை சமூக வலைத்தளங்களில் மிக அதிக அளவில் பரப்புரை செய்வார்கள்.

சில மாதங்களுக்கு முன் 'என்னை அறிந்தால்' படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளிவந்த போது டிவிட்டரில் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் டிரெண்டிங் செய்தனர்.

யு டியூபிலும் அவற்றிற்கு அதிக லைக்குகள் கொடுத்து இந்திய அளவில் மிகப் பெரிய சாதனையை படைத்தனர். நேற்று அஜித்திற்கு மகன் பிறந்ததையடுத்து 'குட்டி தல' என ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதை இந்திய அளவிலும், உலக அளவிலும் டிரெண்டிங்கில் கொண்டு வந்தனர்.

இந்திய அளவில் நேற்று 12 மணி நேரம் 'குட்டி தல' வார்த்தைதான் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இப்போதும் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அஜித்திற்கு மகன் பிறந்ததையடுத்து அவரது ரசிகர்களும் பல பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions