சினிமாவை என்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது! - லட்சுமிமேனன்

Bookmark and Share

சினிமாவை என்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது! - லட்சுமிமேனன்

லட்சுமிமேனனின் தாய்மொழி மலையாளம் என்றபோதும், அந்த சினிமா அவரை பெரிதாக அரவணைக்கவில்லை. ஆனால் ஒரு கதாநாயகிக்குரிய பெரிய பர்சனாலிட்டி இல்லாத அவரை தமிழ் சினிமாதான் ஆதரித்தது. அதோடு அவர் நடித்த படங்களெல்லாமே ஹிட்டாகி வந்ததால், குறுகிய காலத்தில் வேகமாக ஒரு ரவுண்டு வந்தார். ஆனால், கொம்பன் படத்திற்கு பிறகு அவருக்கு புதிய படங்கள் இல்லை. ஆக, ஒரே ரவுண்டில் அவர் ஓய்ந்து விட்டார். அதனால், கோடம்பாக்கத்தை காலி செய்து விட்டு கேரளாவுக்கே பெட்டி படுக்கையுடன் திரும்பி விட்டார் லட்சுமிமேனன். அவர் கைவசம் கெளதமுடன் சிப்பாய் என்றொரு படம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டாலும் அந்த படம் பல மாதங்களுக்கு முன்பே கிடப்பில் கிடக்கிறது.

அதனால், அந்த படத்தை யாரிடமும் அவர் சொல்லிக்கொள்வதில்லை. இந்த நிலையில், நடிப்பதற்கு படமே இல்லாதபோதும், என்னை சினிமாவில் இருந்து யாராலுமே பிரிக்க முடியாது என்று கூறி வருகிறார் லட்சுமிமேனன். காரணம், நான் சினிமாவில் இவ்வளவு படங்களில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து என்னை நிரூபித்து விட்டேன்.

இந்த நிலையில், இந்த பெயரை வைத்துக்கொண்டே இனிமேல் பின்னணி பாடுவதில் அதிக ஆர்வம் காட்டப்போகிறேன் என்று கூறும் லட்சுமிமேனன், சினிமாவை எனனிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாத அளவுக்கு நான் காலமெல்லாம் சினிமாவில் பாடிக்கொண்டேயிருக்கப் போகிறேன். அதனால் என் குரலை இன்னும் இனிமையாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன் எனகிறார் அவர். 


Post your comment





Related News
விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா?
”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
நித்யா மேனனின் திடீர் முடிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions