டீனேஜ் பெண்களின் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடிவுசெய்துள்ள லட்சுமி மேனன்..!

Bookmark and Share

டீனேஜ் பெண்களின் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடிவுசெய்துள்ள லட்சுமி மேனன்..!

சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் அல்லது நடித்து பிரபலமான பின் அந்த புகழ், சந்தோஷத்தை கொடுக்கத்தான் செய்யும்.. அப்படி நடிக்க வந்துவிட்டால் சில விஷயங்களை விட்டுத்தரத்தான் வேண்டும்.. குறிப்பாக நடிகைகள்.. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக ஒருவிதமான புகழ் போதையில் மிதந்த லட்சுமி மேனனுக்கு இப்போது அதுவே எட்டிக்காயாக கசக்கிறதாம்.. காரணம் இந்த டீனேஜ் பருவத்திற்கே உண்டான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் இதென்ன வாழ்க்கை என்கிற சலிப்பு தான் ஏற்படுகிறதாம்.  

தற்போது புதிய படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் லட்சுமி மேனன்.. அவருக்கு பட வாய்ப்புகள் இல்லையென்று ஒரு சிலர் கூறிவந்தாலும், தான் பிளஸ் டூ தேர்வு எழுதுவதற்காகத்தான் படங்களில் நடிப்பதை ஒத்திவைத்திருக்கிறேன் என்கிறார் லட்சுமி மேனன்.. இன்னொரு பக்கம் தமிழில் வழக்கமான கிராமத்து பொண்ணு வேடமாக தேடி வருகிறதாம்.  

அதனால் ஆளை விடுங்க சாமி என கேரளாவிலேயே தங்கி பரீட்சைக்கு படித்துக்கொண்டிருக்கிறாராம். தவிர தேர்வுகள் முடிந்த பின்னரும் கூட நடிப்புக்கு ஒரு சின்ன பிரேக் விட்டுவிட்டு, இந்த வயதில் அனுபவிக்க வேண்டிய விஷயங்களை ஒரு டீனேஜ் பெண்ணாக அனுபவிக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறாராம்.. ஆனால் இதெல்லாம் சாத்தியமாகுமா என தெரியவில்லை.. ஏனென்றால் வீட்டில் காசு பார்த்து பழக்கப்பட்டுவிட்ட தாய்க்குலம் கையில் தானே கடிவாளம் இருக்கிறது..? 


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
நித்யா மேனனின் திடீர் முடிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions